தமிழ்நாடு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை தாண்டும்: அதிர்ச்சி எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 600-க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது திடீரென பத்தாயிரத்திற்கும் அதிகமாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை தாண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்தியாவில் கடந்த மூன்று நாட்களாக ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிலும் 10 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் கொரோனா கேஸ்கள் புதிய உச்சம் தொடும் என இந்திய அறிவியல் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் ஜனவரி இறுதியில் தினசரி 10 லட்சம் கொரோனா கேஸ்கள் வரை பதிவாகும் என்றும் இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் அலையின்போது இந்தியாவில் இதே ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கை சரியாக இருந்தது என்பதை அடுத்து இந்த மூன்று அலையிலும் இந்த ஆய்வறிக்கையின் படி கொரோனா பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பொது மக்கள் பெரும்பாலும் தடுப்பு ஊசி போட்டு இருந்தாலும் ஒமிக்ரான் மிக வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டவர்களையும் ஒமிக்ரான் பாதிக்கும் என்றும் அதனால்தான் இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாகவும் தமிழ்நாட்டில் பத்தாயிரத்துக்கும் அதிகமான கொரோனா கேஸ்கள் பதிவாகும் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் ஜனவரி இறுதியில் 80 ஆயிரம் கேஸ்கள் வரை தொடும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தமிழகம் போலவே ஆந்திரா, சட்டீஸ்கர், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகும் என்றும் பீகார், மத்திய பிரதேசம் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் 30,000 முதல் 35 ஆயிரம் வரை கொரோனா கேஸ்கள் பதிவாகும் என்றும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

பிப்ரவரி தொடக்கத்தில் கொரோனா கேஸ்கள் உச்சம் தொட்டு அதன் பின்னர் படிப்படியாக குறையும் என்றும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version