இந்தியா

இந்தியாவில் 11 ஆயிரத்தை கடந்தது தினசரி கொரோனா பாதிப்பு!

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸின் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை தற்போது 49,622 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு நேற்று 10,00-ஐ கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 10,158 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 11,109 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மாநிலம் வாரியாக பாதிப்பு 

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 3,089 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் 1,527 பேர், மகாராஷ்டிராவில் 1,086 பேர், அரியானாவில் 855 பேர், தமிழ்நாட்டில் 469 பேர், இமாச்சல பிரதேசத்தில் 440 பேர், உத்தரபிரதேசத்தில் 549 பேர், குஜராத்தில் 417 பேர், கர்நாடகாவில் 498 பேர், ராஜஸ்தானில் 293 பேர், சத்தீஸ்கரில் 370 பேர், ஒடிசாவில் 258 பேர், பஞ்சாப்பில் 322 பேர், ஜம்மு காஷ்மீரில் 151 பேர், புதுச்சேரியில் 104 பேர் மற்றும் உத்தரகாண்டில் 196 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையிலும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 97 ஆயிரத்து 269 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 49,622 பேர் கொரோனா வைரஸ் சிகிச்சையில் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version