தமிழ்நாடு

சிலிண்டர் விலை உயர்வு: நிர்மலா சீதாராமனிடம் கிராம மக்கள் கேள்வி!

Published

on

காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்திற்கு வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சிலிண்டர் விலை உயர்வு குறித்து கிராம மக்கள் கேள்வி ஏழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், இந்தியாவில் சிலிண்டர் எரிவாயுவை உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லாததால், சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை என்றார்.

Cylinder price hike

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பழைய சீவரம் கிராமத்தில் பாஜகவினரை சந்தித்து நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சுவர் விளம்பர பணிகளை தொடங்கி வைத்துவிட்டு அந்த பகுதியில் உள்ள மக்களை சந்தித்தனர். அப்போது சிலிண்டர் விலை உயர்வு குறித்து கிராம மக்கள் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், சிலிண்டர் எரிவாயுவை இறக்குமதி செய்வதால், அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. கூடுதலாக மானியம் வழங்க போதிய நிதி இல்லை. மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட வேண்டியுள்ளதால் சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை. மேலும் இந்தியாவில் சிலிண்டர் எரிவாயுவை உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லாததால் விலையேற்றத்தை தவிக்க முடியவில்லை என்று கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version