தமிழ்நாடு

பேருந்தில் காவல் துறையினர் டிக்கெட் எடுக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.

Published

on

காவலர்கள் சொந்த தேவைக்காக பேருந்தில் பயணம் செய்தால் அவர்கள் கண்டிப்பாக பேருந்தில் டிக்கெட் எடுக்க வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் பேருந்தில் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே இத்தனை நாட்களாக விதியாக இருந்தது. காவல்துறையினர் அலுவல் காரணமாக பயணம் செய்தாலும் சொந்த காரணமாக பயணம் செய்தாலும் காவல்துறையினர் என்று நடத்துனரிடம் கூறிவிட்டால் நடத்துனர் டிக்கெட் கேட்க மாட்டார் என்பது குறிப்பிடதக்கது

ஆனால் தற்போது வந்துள்ள டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அனைத்திலும் முறையாக இருக்க வேண்டும் என்று கொள்கையை உடையவர். இந்த நிலையில் சற்று முன் அவர் பிறப்பித்த உத்தரவு ஒன்றில் சொந்த தேவைக்காக அரசு பேருந்தில் காவல்துறையினர் பயணம் செய்யும்போது கண்டிப்பாக காவல் துறையினர் டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு காவல் துறையினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version