தமிழ்நாடு

வங்கக்கடல், அரபிக்கடல்: இரண்டு கடலிலும் புயல்; மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்!

Published

on

அரபிக்கடலில் உள்ள லூபன் புயல் வலுபெற்றுள்ள அதே நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அரபிக்கடலில் உள்ள லூபன் புயல் வலுப்பெற்றுள்ளது, வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக மாறியுள்ளது. இது புயலாக வலுப்பெறவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் காற்றின் போக்கு மற்றும் ஈரப்பதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் வடகிழக்கு பருவமழை நிலவுவதற்கான சூழ்நிலை மாறியுள்ளது. அடுத்துவரும் 24மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் வரும் 10-ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version