இந்தியா

பூஸ்டர் தடுப்பூசிக்கு விண்ணப்பித்தால் பேங்க் பேலன்ஸ் காலியாகுமா? சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை!

Published

on

பூஸ்டர் தடுப்பூசி போடுபவர்களின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு மோசடியான லிங்க் அனுப்பி அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்யும் கும்பல் இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி போடுபவர்கள் ஆன்லைன் மூலம் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக விண்ணப்பங்கள் பதிவு செய்தவர்களின் செல்போன் எண்ணுக்கு மர்மமான லிங்க் அனுப்பப்படுவதாக அந்த லிங்கை கிளிக் செய்து ஓடிடி எண்ணை மோசடி நபர்கள் கேட்பதாகவும் ஓடிடி எண்ணை தெரியாமல் கொடுத்து விட்டால் அவருடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் காலியாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

எனவே பூஸ்டர் டோஸ் போட விண்ணப்பித்தவர்களின் செல்போன் எண்ணுக்கு மோசடியாக லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அதே போல் ஓடிடி எண்ணை கேட்டு யாராவது போன் செய்தால் தர வேண்டாம் என்றும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு எந்தவிதமான ஓடிடி எண்ணும் தேவையில்லை என்றும் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

மோசடியான நபர்களிடம் இருந்து வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் மர்ம நபர்கள் அனுப்பும் அதிகாரபூர்வமற்ற லிங்குகளை டவுன்லோட் செய்ய வேண்டாமென்றும் இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக புகார் தெரிவிக்குமாறு அறிவித்துள்ளனர்.

பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு விண்ணப்பம் செய்தவர்கள் கொஞ்சம் அசந்தால் அவர்களுடைய பேங்க் பேலன்ஸ் காலியாகி விடும் என்ற செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version