தமிழ்நாடு

சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்பு சரியா? இன்று கூடுகிறது தேர்வு கமிட்டி!

Published

on

சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பு குறித்து முடிவெடுக்கும் தேர்வு கமிட்டியின் கூட்டம் இன்று மாலை நடக்க உள்ளது.

சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது சரியா, தவறு என்பது குறித்து தெரிந்து கொள்ள இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

ஆனாலும் உச்ச நீதிமன்றம் இதில் ஒரு நிபந்தனையும் விதித்து இருக்கிறது. சிபிஐ அதிகாரிகளை தேர்வு செய்யும் அமைப்பான விஜிலென்ஸ் அமைப்புதான், சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்பில் முடிவு எடுத்திருக்க வேண்டும். அதனால் அலோக் வெர்மா விடுமுறை குறித்து சிவிசி முடிவு செய்யலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இதில் சிவிசி முடிவு செய்யம் வரை சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இப்போது எந்த விதமான முக்கிய முடிவுகளும் எடுக்க கூடாது. மூன்று பேர் கொண்ட உயர் தேர்வு கமிட்டி குழு இந்த கட்டாய விடுப்பு குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version