வைரல் செய்திகள்

ரெஸ்டாரண்டில் சப்ளையருக்கு கிடைத்த டிப்ஸ் எவ்வளவு தெரியுமா? இதுக்கு பேரு தான் அதிர்ஷடம்!

Published

on

பென்சில்வேனியாவில் ரெஸ்டாரண்டில் பணிபுரியும் சப்ளையர் பெண்ணுக்கு 3.67 லட்சம் ரூபாய் டிப்ஸ் கிடைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி உள்ளது. இப்படி லட்சக்கணக்கில் டிப்ஸ் வழங்கிய நபர் யார்?

பென்சில்வேனியாவில் உள்ள பாக்ஸடன் என்ற நகரில் அந்தோணிஸ் எனும் ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த ரெஸ்டாரண்டில் கியானா டி ஏஞ்சலோ என்பவர் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார்.

வழக்கம் போல் ரெஸ்டாரண்டில் கியானோ டி பணியாற்றி வந்தார். அப்போது ஒருவர் ரெஸ்டாரண்டில் சாப்பிட வந்தார். எல்லோரும் போல சாப்பிட்டு முடித்ததும் டிப்ஸ் வைத்து விட்டு சென்றார். ஆனால், அந்த டிப்ஸை பார்த்த கியானாவுக்கோ பேரதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் அதில் சுமார் 3.67 லட்சம் ரூபாய் டிப்ஸ்  வைக்கப்பட்டிருந்தது. இதனை சற்றும் எதிர்பாராத கியானோ, டிப்ஸ் வைத்தவர் யார் என்று தேடினார். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து தனது ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட கியானோ, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தனக்கு இவ்வளவு லட்சம் ரூபாய் டிப்ஸாக கொடுத்தமைக்கு நன்றி அவர், எங்கிருந்தும் வாழ்க என்று கூறினார். கடைசி வரையில், 3.67 லட்சம் ரூபாய் டிப்ஸ் வைத்த நபர் யார் என்றே தெரியவில்லை.

Trending

Exit mobile version