உலகம்

டெல்டா வைரஸ் பரவுவதை தற்போதைய தடுப்பூசிகள் தடுக்காது: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published

on

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்துக்கே பேரழிவை கொடுத்து வருகிறது. மேலும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வேலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டுமானால் தடுப்பூசி போட வேண்டும் என்றும் அனைத்து நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சகம் மூலம் பொது மக்களுக்கு அறிவித்து வருகின்றன. அதன் அடிப்படையில் ஏராளமானோர் தற்போது தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.

உலகம் முழுவதும் சுமார் 30 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்தி விட்டதாகவும், மேலும் தடுப்பூசியை செலுத்துவதில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய 3 தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் பல தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தற்போது உருமாறி டெல்டா வைரஸ் என்ற புதியவகை வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இது குறித்து ஆய்வு செய்த பிரிட்டன் நிறுவனம் ஒன்று டெல்டா வகை வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதை தற்போது உள்ள தடுப்பூசிகள் தடுக்காது என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரிட்டனில் இரண்டு டோஸ்கள் செலுத்தி கொண்ட பிறகும் சுமார் 35% பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே டெல்டா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக மேலும் ஒரு புதிய தடுப்பூசி கண்டுபிடித்த வேண்டுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Trending

Exit mobile version