தொழில்நுட்பம்

கூகுள் மற்றும் அமேசான் உருவாக்கும் ட்ருலி வயர்லெஸ் ஹெட்போன்ஸ்.!

Published

on

கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் இணைந்து ட்ருலி வயர்லெஸ் ஹெட்போன்ஸ்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ்களின் விற்பனை அண்மையில் இந்திய சந்தையில் சூடு பிடித்துள்ளது. இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்போட்ஸ் மற்றும் ஜப்ரா நிறுவனத்தின் எலீட் ஆக்ட்டிவ் 65டி மாடல்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது கூகுள் நிறுவனம் மற்றும் அமேசான் நிறுவனம் இணைந்து ட்ருலி வயர்லெஸ் ஹெட்போன்ஸ்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இருநிறுவனங்களும் இணைந்து 2019 ஆம் ஆண்டில் நிச்சயம் தனது புது ட்ருலி வயர்லெஸ் ஹெட்போன்ஸ்களை ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்போட்ஸ்களுக்கு போட்டியாக வெளியிடுமென்று அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் இல் ஹெட்போன் இன் ஆடியோ ஜாக்களை நீக்கி ஏர்போட்ஸ் சேவையை அறிமுகம் செய்தது. ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து அதிகப்படியான நிறுவனம் ட்ரு ஹெட்போன்ஸ் தயாரிக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியது.

அமேசான் மற்றும் கூகுள் இணைந்து உருவாகும் ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ்களின் ரிஜிட்-பிளக்ஸ் பி.சி.பி போர்டுகளை கோர்ட்டெக் மற்றும் யூனிடெக் நிறுவனம் வடிவமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் தந்து புதிய ஏர் போட்ஸ்களை 2020 இல் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு சந்தையில் கூகுள் நிறுவனத்திற்கென்று தனி செல்வாக்கு இருக்கின்றது, அதேபோல் வாய்ஸ் அசிட்டேன்ட சேவை வழங்கும் அமேசான் நிறுவனத்திற்கும் தனி இடமிருக்கிறது. இரண்டு நிறுவனங்களும் இணைந்து உருவாகவிருக்கும் ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version