தமிழ்நாடு

கொலை வழக்கு: கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்

Published

on

கடலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி கம்பெனியில் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இது குறித்த வழக்கில் கடலூர் எம்பி ரமேஷ் உள்பட 6 பேர்கள் போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று கடலூர் எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

திமுக எம்பி ரமேஷ் அவர்களுக்கு சொந்தமான முந்திரி ஆலை ஒன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது. இந்த ஆலையில் வேலை செய்து வந்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி கடந்த மாதம் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரை எம்பி ரமேஷ் மற்றும் அவரது ஆட்கள் கொலை செய்துவிட்டதாக கோவிந்தராஜன் மகன் செந்தில்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பாமக வழக்கறிஞர் பாலு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவிந்தராஜனின் பிரேத பரிசோதனையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

இதனை அடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் பிறப்பித்த உத்தரவின்படி சிபிசிஐடி கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி இந்த வழக்கை எடுத்து விசாரணையை தொடங்கியது. முதல் கட்ட விசாரணையில் கடலூர் எம்பி ரமேஷ்க்கு சொந்தமான ஆலைக்கு சென்று விசாரணை நடத்தியபோது கோவிந்தராஜன் அடித்து கொடுமைப் படுத்தப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த ஆலை ஊழியர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி 6 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பதும், அவர்களில் திமுக எம்பி ரமேஷூம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிபிசிஐடி 5 ஊழியர்களை கைது செய்த நிலையில் ஆறாவதாக எம்பி ரமேஷ் தலைமறைவாக இருந்ததால் அவரை தேடும் பணி நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த கடலூர் எம்பி ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்ட ஆறு பேரில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கடலூர் எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்த கடலூர் எம்பி ரமேஷ் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

Trending

Exit mobile version