இந்தியா

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

Published

on

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ அமைப்பு வெளியிட்டுள்ள இந்த தேர்வு முடிவுகளை ctet.nic.in என்ற இணையதள முகவரியில் அறியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 12.47 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில் 4.14 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இரண்டாம் தாளில் 11.04 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில் 2.39 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த ஜனவரி 31 ஆம் தேதி மத்திய இடைநிலை கல்வி வாரியம் இந்த தேர்வை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வு முடிவுகளை காண www.ctet.nic.in என்ற இணையதள முகவரியில் தேர்வர்கள் தங்களது ரோல் நம்பரை பதிவு செய்து அதன் பின் தேர்வு முடிவுகளை அறிந்து அதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version