தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அதிமுக முடிவெடுக்க முடியாது: சிடி ரவி

Published

on

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அதிமுக முடிவெடுக்க முடியாது என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அந்த வாக்குறுதியை திரும்ப பெற வலியுறுத்துவோம் என்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியான நிலையில் அந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவற்றில் ஒன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் சிஐடி ரவி கூறியபோது ’குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற மாட்டோம் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பை திரும்பப் பெற அதிமுக தலைவர்களிடம் வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அதிமுக முடிவெடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்து வரும் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இரு கட்சிகளிடையே கருத்து ஏற்பாடு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version