கிரிக்கெட்

CSK: வெறித்தனமான பயிற்சியில் ஈடுபடும் ‘சின்ன தல’ ரெய்னா; கம்-பேக் குறித்து சொல்வது இதுதான்!!!

Published

on

சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. அவர் வெறித்தனமான பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சி.எஸ்.கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதற்கு ‘சின்ன தல’-யும் ரியாக்ட் செய்துள்ளார். இது இணைய வைரலாக மாறியுள்ளது. 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த ஆண்டு சென்னை அணி, தனது முதல் போட்டியை ஏப்ரல் 10 ஆம் தேதி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது. ஐபிஎல் தொடருக்காக தோனி, ரெய்னா உள்ளிட்ட சி.எஸ்.கே வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

ரெய்னா, பேட்டிங் பயிற்சி செய்து வரும் காணொலியைப் பதிவிட்ட சென்னை அணி, ‘சின்ன தல கம்மிங், விசில் போடு’ என்று பதிவிட்டுள்ளது. அதற்கு ரெய்னா, ‘மீண்டும் எங்கள் குகைக்கு வர மிகவும் உற்சாகத்தோடு இருக்கிறேன்’ என்றுள்ளார். 

காணொலியும் அதற்கு ரெய்னாவின் ரியாக்‌ஷனும், 

seithichurul

Trending

Exit mobile version