கிரிக்கெட்

4வது முறையாக ஐபிஎல் சாம்பியன்: சம்பவம் செய்த தல தோனியின் படை!

Published

on

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் சென்னை அணி மிக அபாரமாக விளையாடி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் டூபிளஸ்சிஸ் அபாரமான ஆட்டத்தால் 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது. அதன்பின் 193 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் வெங்கடேச அய்யர் அரைசதம் அடித்த போதிலும் அதன் பின்னர் வந்த ஒரு பேட்ஸ்மேன் கூட இரட்டை இலக்க ரன்கள் கூட எடுக்கவில்லை. கடைசியாக பந்துவீச்சாளர்கள் ஆன பெர்குசன் மற்றும் மாவி ஆகிய இருவரும் ஓரளவுக்கு அடுத்து ஆடினாலும் இலக்கை எட்ட முடியவில்லை என்பதால் அந்த அணி தோல்வி அடைந்தது.

இதனை அடுத்து நான்காவது முறையாக ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010, 201,1 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டிலும் சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது தல தோனியின் முழுக்க முழுக்க திட்டமிடல்தான் தான் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நேற்றைய போட்டி முடிந்ததும் தல தோனியின் மனைவி சாக்சி மற்றும் மகள் ஜீவா ஆகிய இருவரும் மைதானத்திலேயே தோனியை கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version