இந்தியா

தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி கொடுக்கும் சிஎஸ்கே: தோனி காரணமா?

Published

on

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ரூபாய் ஒரு கோடி பரிசு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தோனியும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

தற்போது ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா மிக அபாரமாக ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நூறு ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் தடகள போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதனை நாடே கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் மட்டுமின்றி பரிசுகளும் குவிந்து வருகிறது.

நீரஜ் சோப்ரா அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ரூபாய் 2 கோடி பரிசு வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி அவருக்கு அரசு வேலை வழங்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீரஜ்சோப்ராவுக்கு ரூபாய் ஒரு கோடி பரிசு அறிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பரிந்துரையில் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் தோனி சில மாதங்களில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார் என்பது தெரிந்ததே. அதேபோல் தங்கம் வென்று உள்ள நீரஜ்சோப்ராவும் இந்திய ராணுவத்தில் பணி புரிந்துள்ளார். அப்போது இருவருக்கும் அறிமுகம் என்பதும் நல்ல பழக்கம் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து தனது சக ராணுவ வீரருக்கு ரூபாய் ஒரு கோடி பரிசை அளிக்க தோனி பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் நீரஜ்சோப்ராவுக்கு பரிசுகள் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Trending

Exit mobile version