கிரிக்கெட்

ஆரம்பம் முதலே அதிரடி: 220 ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி!

Published

on

இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

ருத்ராஜ் மற்றும் டூபிளஸ்சிஸ் ஆகிய இருவரும் களமிறங்கிய நிலையில் இருவரும் இணைந்து 115 ரன்கள் குவித்தனர். ருத்ராஜ் 64 ரன்களில் அவுட்டானார். அதன்பின்னர் மொயின் 25 ரன்களும் கேப்டன் தோனி 17 ரன்களும் எடுத்திருந்த நிலையில் கடைசி வரை அவுட் ஆகாமல் டூபிளஸ்சிஸ் 95 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்த 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 220 ரன்கள் குவித்துள்ளது. வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் மற்றும் ரஸல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

221 என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், சாம் கர்ரன், நிகிடி ஆகியோர்களின் பந்து வீச்சு அபாரமாக இருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

Trending

Exit mobile version