கிரிக்கெட்

நேற்றைய சிஎஸ்கே வெற்றிக்கு காரணமான மூவர் இவர்கள் தான்!

Published

on

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே போட்டி என்றாலே இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் போல் பரபரப்பாக இருக்கும். இதுவரை இரு அணிகளும் 9 முறை மோதியுள்ளன கையில் 7 முறை மும்பை தான் வெற்றி பெற்றுள்ளது என்பதும் சென்னை அணி இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணி மிகப் பெரிய வலுவான அணியாக இருந்தாலும் மும்பை உடன் விளையாடும் போது மட்டும் சொதப்பிக் கொண்டே இருந்ததால் சென்னை வீரர்கள் மும்பையை மறுபடியும் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் நேற்று களமிறங்கினர். நேற்றைய போட்டியில் தல தோனி டாஸ் வென்றதை அடுத்து அவர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தார். ஆனால் அந்த முடிவு தவறு என்று நினைக்கும் வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன.

தொடக்க ஆட்டக்காரரான டுப்லஸ்ஸிஸ் ரன் ஏதும் எடுக்காமலும், அதனை அடுத்து மொயீன் அலியும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். அதிரடி ஆட்டக்காரரான அம்பத்தி ராயுடு காயம் காரணமாக மூன்று பந்துகளில் மைதானத்தை விட்டு வெளியே வெளியேறினார். அதன் பின்னர் நம்பிக்கை நட்சத்திரங்கள்ஆன சுரேஷ் ரெய்னா மற்றும் எம்எஸ் தோனி ஆகிய இருவரும் 4 மற்றும் 3 ரன்களுக்கு அவுட் ஆகினர்.

ஒரு கட்டத்தில் சென்னை அணி 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்ததால் 100 ரன்களை தாண்டுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதன் பின் நட்சத்திர பேட்ஸ்மேனான ருத்ராஜ், ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் பிராவோ மற்றும் ஜடேஜாவுடன் உடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ருத்ராஜ் எடுத்த 88 ரன்கள் காரணமாக சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் குயின்டன் டி காக் 17 ரன்களிலும், அல்மோல் ப்ரீத்திசிங் 16 ரன்களிலும் அவுட் ஆகினர். தீபக் சஹர் இவர்கள் இருவரையும் வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பேட்டிங் செய்ய வந்த சூரியகுமார் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரையும் ஷர்துல் தாகூர் மற்றும் பிராவோ வெளியேற்றினர்.

நான்கு முக்கிய விக்கெட்டுகள் விழுந்தபோதிலும் திவாரி கடைசி வரை களத்தில் இருந்து 50 ரன்கள் எடுத்தார். இருப்பினும் க்ருணாள் பாண்டியா, பொல்லார்டு ஆகியோர் சொதப்பிய ஆட்டத்தின் காரணமாக மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் மிக அபாரமாக ஆடிய 88 ரன்களும் பந்துவீச்சில் தீபக் சஹர் எடுத்த இரண்டு முக்கிய விக்கெட்டுகளும் இதனை அடுத்து 20வது வரை வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்திய பிராவோ ஆகிய மூவரின் அபாரமான ஆட்டம் காரணமாக சென்னை அணி நேற்று பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version