கிரிக்கெட்

சென்னை அணியில் ‘வலிமை’ அப்டேட் புகழ் மொயின் அலி: தல ரசிகர்கள் உற்சாகம்

Published

on

சமீபத்தில் சென்னையில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் மொயின் அலிகான் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் கேட்டதால் அவர் குழப்பம் அடைந்தார்.

‘வலிமை’ என்றால் என்னவென்றே தெரியாத அவரிடம் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் நேராக அஸ்வினிடம் சென்று ‘வலிமை’ என்றால் என்ன என்று கேட்டதாகவும் அதற்கு அஸ்வின் முதலில் குழப்பம் அடைந்து அதன்பின் அஜித் ரசிகர்களின் வேலைதான் இது என்பது தெரிந்து கொண்டு அதை அவருக்கு விளக்கியதாகவும் அஸ்வின் ஒரு வீடியோ ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்த செய்திகள் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொயின் அலியை ஏலம் எடுத்துள்ளது. தற்போது சென்னை அணியின் வீரர்களில் ஒருவராக மொயின் அலி மாறிவிட்டதால் அவரை வைத்தே ‘வலிமை’ அப்டேட்டை படக்குழுவினர் வெளியிடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version