கிரிக்கெட்

விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி: என்ன ஆச்சு சென்னை, மும்பை அணிகளுக்கு?

Published

on

ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் தோல்வியடைந்துள்ளது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்தது என்பதும் இரண்டாவது இடத்தை மும்பை அணி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஆண்டு மும்பை மற்றும் சென்னை அணிகள் மிக சிறப்பாக விளையாடி மீண்டும் இறுதிப்போட்டியில் மோதும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் தற்போது இரு அணிகளுமே மிக மோசமாக விளையாடி வருகிறது .

சென்னை இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேபோல் மும்பை அணியும் நான்கு போட்டிகளிலும் நான்கிலும் தோல்வி அடைந்து ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அணிகளான குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் மிக சிறப்பாக விளையாடிய புள்ளி பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகள் பின்னடைவில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பதும் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை மற்றும் மும்பை அணிகள் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினாலும் அணியில் உள்ளவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவில்லை .

எனவே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை பொருத்தவரை சென்னை மற்றும் மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version