உலகம்

இறங்கிய பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறதா?

Published

on

பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்ததால் அவற்றின் விலை தற்போது குறைந்த போதும் அடுத்து வரும் மாதங்களில் விலை கணிசமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

எண்ணெய் வள நாடுகளின் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. சவுதி ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் திட்டமிட்டபடி கச்சா எண்ணெய் உற்பத்தியை மெல்ல அதிகரிக்க இருப்பதாகவும் இதனை டிசம்பர் மாதம் தினசரி நான்கு லட்சம் பீப்பாய் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது

உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனாவில் இருந்து மீண்டு, அங்கு இயல்பான சூழல் திரும்பி உள்ளது. ஆனால் எண்ணெய் வள நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை போது முடக்கத்திற்கு முந்தைய அளவுக்கு மட்டுமே உற்பத்தி செய்து வருகின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து இந்தியா போன்ற பல நாடுகள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன

எனவே உலக நாடுகளின் தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க, எண்ணெய் வள நாடுகளை அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்நாடுகளின் வலியுறுத்தலை நிராகரித்த எண்ணை வள நாடுகள் உற்பத்தியை மெல்ல மெல்லவே அதிகரிக்கும் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளதாக கூறியுள்ளனர். இதனால் அடுத்து வரும் வாரங்களில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 85 டாலர்களை தொட்டு பின்னர் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு காரணமாக 82 டாலராக குறைந்தது. ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் வள நாடுகள் ஒப்புக்கொள்ளாததால் இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை தற்போதைக்கு குறைந்தாலும் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version