இந்தியா

கொரோனாவைப் பொருட்படுத்தாமல் சுற்றுலா தலங்களில் குவியும் மக்கள் – அரசு கடும் எச்சரிக்கை!

Published

on

இந்தியாவில் இன்னும் ஒரு சில மாதங்களில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவ வாய்ப்பு உள்ளது என்று சுகாதார வல்லுநர்களும் மருத்துவர்களும் எச்சரித்து வருகிறார்கள். குறிப்பாக இந்திய அளவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக பல மாதங்களாக வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்த மக்கள், சுற்றுலா தலங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். அப்படிச் செல்லும் நபர்கள், சுற்றுலா தலங்களில் முகக் கவசம் அணியாமலும், கொரோனா கட்டுப்பாடுகளை மதிக்காமலும் சுற்றித் திரிந்து வருகிறார்கள்.

இது குறித்த வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசுத் தரப்பு, ‘சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டு அங்கும் பொருளாதார சூழல் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பது உண்மை தான்.

ஆனால் பெருந்தொற்றுக் காலத்தில் கட்டுப்பாடுகளை மதிக்காமல் திரிந்தால் மீண்டும் நாம் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும். அதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளது.

 

Trending

Exit mobile version