வணிகம்

உற்பத்தி தொழிற்சாலைகளை இழுத்து மூடும் க்ராக்ஸ்..!

Published

on

நியூ யார்க்: அமெரிக்கக் காலணி நிறுவனமான க்ராக்ஸ் தங்களது உற்பத்தி தொழிற்சாலைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. தொழிற்சாலையினை மூடினாலும் காலணிகள் விற்பனை வணிகத்தினை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும் க்ராக்ஸ் தெரிவித்துள்ளது.

தொழிற்சாலைகளை மூடுவது மட்டும் இல்லாமல் குறைந்த அளவில் மட்டுமே விற்பனை நடக்கும் ரீடெயில் கடைகளை மூட உள்ளதாகவும் ஆன்லைன் விற்பனையில் கவனம் செலுத்த உள்ளதாகவும் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

தொழிற்சாலைகள் மூடிய பிறகு உற்பத்தியினை மூன்றாம் தரப்பிடம் ஒப்படைக்க உள்ளது க்ராக்ஸ். எனவே எப்போதும் போல் விற்பனையில் க்ராக்ஸ் பிராண்டு காலணிகள் கிடைக்கும்.

தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில் அமெரிக்காவில் 1000 கணக்கான ஊழியர்கள் தங்களது வேலையை இழக்க நேரிடும் என்பதும் முக்கியமான ஒன்றாகும்.

seithichurul

Trending

Exit mobile version