தமிழ்நாடு

வாக்கெடுப்புக்கு முன்பே ராஜினாமா செய்கிறாரா முதல்வர் நாராயணசாமி?

Published

on

புதுவையில் இன்று மாலை 5 மணிக்குள் முதல்வர் நாராயணசாமி தனது அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என சமீபத்தில் துணைநிலை ஆளுநர் ஆக பதவியேற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உத்தரவிட்டதை அடுத்து இன்று புதுவை சட்டசபையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

ஏற்கனவே 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு திமுக எம்எல்ஏ தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள காரணத்தினால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னரே நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்ய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கு கோரும் முன்பே பெரும்பான்மையை நாராயணசாமி அரசு இழந்துவிட்டதால் சட்டப்பேரவை இன்று கூடும் முன்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் புதுவையின் அரசியல் நெருக்கடிக்கு இன்று முடிவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இன்று பெரும்பான்மையை முதல்வர் நாராயணசாமி நிரூபிக்கவில்லை என்றால் கவர்னர் ஆட்சி அல்லது காபந்து அரசு அமைய வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version