இந்தியா

ஜம்மு காஷ்மீரில் ராணுவ பணியில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் தோனி!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல வீரருமான தோனி இந்திய ராணுவத்தின் பாராஷுட் ரெஜிமென்ட் பிரிவில் காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார்.

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனிக்கு இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கலோனல் பதவியில் உள்ளார். பாராஷுட் ரெஜிமென்ட் பிரிவில் அவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தோனி ராணுவத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் ராணுவ பயிற்சி மற்றும் பணிகளில் ஈடுபட உள்ளார்.

உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய தோனிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்கள் தான் ஓய்வில் இருக்கப்போவதாக தோனி அறிவித்துள்ளார். ஆனால் அந்த இரண்டு மாதங்களும் அவர் இந்திய ராணுவத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தார். ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 31 வரை 106 டிஏ பட்டாலியனில் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளதாகவும், இந்தக் குழு, காஷ்மீரில் இருக்கும் விக்டர் ஃபோர்ஸ் எனும் படையின் ஓர் அங்கமாகச் செயல்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள விக்டர் படையுடன் தோனி நேற்று இணைந்தார். அவர் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை காஷ்மீரில் பணியில் ஈடுபடவுள்ளார். ரோந்து செல்லுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்வார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

seithichurul

Trending

Exit mobile version