இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு – பங்கமாக கலாய்த்த கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி!

Published

on

நாட்டில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த விலை உயர்விற்கு மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும்பான்மையான விகிதம், மத்திய அரசு விதிக்கும் வரிகளுக்கேச் செல்கிறது. இதனால் அந்த வரி விகிதத்தை மத்திய அரசுக் குறைக்க முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை பங்கமாக கேலி செய்துள்ளார்.

நாட்டில் பெட்ரோல் விலை இரண்டு நாட்களுக்கு முன்னர், 100 ரூபாயைத் தாண்டியது. ராஜஸ்தான் மாநில ஶ்ரீ கங்காநகரில் இரு நாட்களுக்கு முன், ஒரு லிட்டர் பெட்ரோல் 100.13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நாட்டில் தொடர்ச்சியாக 11வது நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த விலை உயர்வு பற்றி மனோ திவாரி, ‘பெட்ரோல் எப்படிப்பட்ட ஒரு இன்னிங்ஸை விளையாடியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் மிகத் திறமையாக விளையாடி சதம் விளாசியுள்ளது. நீ, விளையாடிய முதல் பந்து முதலே எப்படியும் மிகப் பெரிய இலக்கை அடைவாய் எனத் தெரிந்தது. அதேபோல டீசலும் பெட்ரோலுக்கு நல்ல துணையாக இருந்தது. நீங்கள இருவரும் இணைந்து மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் போட்டுள்ளீர்கள். சாதாரண மக்களுக்கு எதிராக விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், நீங்கள் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி உள்ளீர்கள்’ என்று கிரிக்கெட் கமென்ட்ரி போலவே விலை ஏற்றத்தைக் கிண்டல் செய்துள்ளார்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version