சினிமா

சூப்பர்ஸ்டாருக்கு கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் பிறந்த நாள் வாழ்த்து!

Published

on

நடிகர் ரஜினியின் 68வது பிறந்த நாள் இன்று ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கள், ரஜினியுடன் தான் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து, ”பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா, உங்கள் ஆரோக்கியம் நீண்ட நாள் நன்றாக இருக்க வேண்டும், மேலும், வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், பாலிவுட் நடிகரும், 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த நடிகர் அக்‌ஷய் குமாரும் ரஜினியுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துகள் தெரிவித்தார். விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சசி குமார் என சினிமா பிரபலங்களும்,  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜன் போன்ற அரசியல் தலைவர்களும் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் கமல், காலையிலேயே, நண்பர் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், நம் நட்பும் வெற்றியும் தொடரட்டும் என தெரிவித்தார்.

இதற்கு, நன்றி கமல், என்றும் உங்கள் ரஜினி என பதில் அளித்தார்.

 

seithichurul

Trending

Exit mobile version