கிரிக்கெட்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி வெளியிட்ட டுவிட்டர்: பயனர்கள் மகிழ்ச்சி!

Published

on

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை டுவிட்டர் இணையதளம் கூறியிருக்கும் நிலையில் அதன் கோடிக்கணக்கான பயனர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை டி20 போட்டியில் இதுவரை வார்ப் அப் மற்றும் தகுதி போட்டிகள் நடந்த நிலையில் இன்று முதல் போட்டிகள் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 29 நாட்கள் நடைபெற உள்ள இந்த தொடரின் இறுதி போட்டி நவம்பர் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் கோடிக்கணக்கானோர் இருப்பதை கணக்கில்கொண்டு டுவிட்டர் இணையதளம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி இனிமேல் ட்விட்டர் செயலியில் கிரிக்கெட் ஸ்கோர் நேரடியாக தோன்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடத்தக்கது. டுவிட்டரில் உள்ள எக்ஸ்ப்ளோர் மற்றும் லைவ் பக்கத்தில் இந்த ஸ்கோர் தோன்ற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை டி20 போட்டி மட்டுமன்றி இனி நடைபெறும் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியின் ஸ்கோர்களையும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் பயனாளர்கள் டுவிட்டர் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவ்வப்போது இந்த ஸ்கோர் போர்டு அப்டேட் செய்யப்படும் என்றும் டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவில் இந்த வசதியை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்று முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அனைத்து தகவல்களையும் ட்விட்டர் பக்கத்திலேயே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version