கிரிக்கெட்

ஹர்பஜன்சிங் எடுத்த திடீர் முடிவு: அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

Published

on

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் எடுத்த அதிரடி முடிவால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ஓய்வு முடிவை திடீரென அறிவித்துள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் தங்கள் அதிர்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன்சிங் தனது ஓய்வு முடிவை ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். இந்த 23 ஆண்டு கால பயணத்தை அழகாகவும் மறக்க முடியாததாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் அவர் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன்சிங் சிங் கடந்த 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டி தான் அவரது கடைசி டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 1998ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் என்பதும் 2006ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹர்பஜன்சிங் சிங், 417 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 236 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 28 டி20 போட்டிகளில் விளையாடிய 25 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை 1997ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாடி ஹர்பஜன்சிங் சிங், அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். பிறகு 2018-19 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி ஹர்பஜன்சிங் சிங் தற்போது கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version