தமிழ்நாடு

நகைக்கடனை அடுத்து மேலும் ஒரு கடன் தள்ளுபடி: தமிழக அரசின் அரசாணை!

Published

on

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது என்பதும் இந்த அரசாணைக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது நகை கடனை அடைத்து மேலும் ஒரு கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக சற்றுமுன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை 2756 கோடி ரூபாய் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் மார்ச் 31 வரை நிலுவையில் உள்ள கடன்கள் தள்ளுபடி என்று அறிவிப்பு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version