தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெளியீடு!

Published

on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன், 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சற்றுமுன் வெளியிட்டார். அந்த பட்டியலின் விபரங்கள் இதோ:

பவானிசாகர்- சுந்தரம்

திருப்பூர் வடக்கு- ரவி என்ற சுப்பிரமணியன்

திருத்துறைப்பூண்டி- மாரிமுத்து

வால்பாறை- ஆறுமுகம்

தளி- ராமச்சந்திரன்

சிவகங்கை- குணசேகரன்

ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ், மார்க்கிஸ்ட், மதிமுக, போன்ற கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version