தமிழ்நாடு

தொகுதி பங்கீட்டில் இழுபறி: சிபிஐ, சிபிஎம் கூட்டாக ஆலோசனை!

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணியிலும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை தான் ஏற்பட்டுள்ளன.

அதிமுக தரப்பில் பாமகவும், திமுக தரப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையில் மட்டுமே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இன்னும் முக்கிய கட்சிகளின் கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு திமுகவின் அழைப்பின் பேரில் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் மாநில பிரதிநிதிகள் சென்றனர். ஆனால் திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் மாநில செயலாளர்கள் கூட்டாக இணைந்து ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதேபோல் திமுகவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் வைகோவும் தனது மதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அனேகமாக அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணியில் இருந்தும் முக்கிய கட்சிகள் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version