இந்தியா

கோவிஷீல்டு தடுப்பூசி விலையில் திடீர் மாற்றம்: தற்போதைய விலை எவ்வளவு?

Published

on

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தினமும் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை குறைப்பதற்காக நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு விதமான தடுப்பூசிகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பல லட்சக்கணக்கானோர் இந்த தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். இந்த நிலையில் திடீரென கோவிஷீல்ட் தடுப்பூசி விலை ஏற்றம் செய்யப்பட்டது என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கு நாடு முழுவதும் இது பெரும் கண்டனங்கள் குவிந்த நிலையில் தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசி விலை குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலையை 25% குறைத்துக் கொள்வதாக சீரம் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போதைய ஒரு கோவிஷீல்ட் டோஸ் விலை ரூபாய் 400 இல் இருந்து ரூபாய் 300 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version