இந்தியா

அடங்கப்பா.. Covishield தடுப்பூசி விலை எவ்வளவு ரூபாய் தெரியுமா?

Published

on

கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்தியஅரசிற்கு ரூ.292 க்கு தரவிருப்பதாக சீரம் இன்ஸ்டிடியூட் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

உலகையே புரட்டிபோட்ட கொரோனா நோய்க்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்திற்கும், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிகளுக்கும் இந்திய மருந்துகள் கட்டுப்பட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.

இதே போல், உலக அளவில் மிக பிரபலமான சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரிக்கும் உரிமையை தற்போது பெற்றுள்ளது. இதை பற்றி சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா கூறுகையில், அனைத்து மக்களும் அணுகும் முறையில் தடுப்பூசி அமைய வேண்டும் என்பதற்காக விலை குறைவாக தரப்படுவதாக தெரிவித்தார். இந்திய சந்தையில் இந்த மருந்தின் விலை ரூ.219-292  என்றும், தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவிற்கு முதல்உரிமை கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும், இந்திய அரசு ஜீலை மாதத்திற்குள் 30 கோடி டோஸ்கள் தடுப்பு மருந்துகள் கேட்டிருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.

Trending

Exit mobile version