இந்தியா

தமிழ்நாட்டில் 117 பேருக்கு ஒமிக்ரான் தொற்று.. குணமடைந்தோர் எத்தனை பேர்?

Published

on

தில்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 24 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 1525 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 560 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 460 பேருக்கும், தில்லியில் 351 பேருக்கும், தொற்று ஏற்பட்டு தில்லியில் 57 பேரும், மகாராஷ்டிராவில் 180 பேரும் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 117 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 74 பேர் ஆக உள்ளது.

வரிசை எண் மாநிலம் ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கை குணமானவர்கள்/வெளியேறிவர்கள்
1 மகாராஷ்டிரா 460 180
2 டெல்லி 351 57
3 குஜராத் 136 69
4 தமிழ்நாடு 117 74
5 கேரளா 109 1
6 ராஜஸ்தான் 69 61
7 தெலுங்கானா 67 27
8 கர்நாடகா 64 18
9 ஹரியானா 63 40
10 மேற்கு வங்காளம் 20 4
11 ஆந்திரப் பிரதேசம் 17 3
12 ஒடிசா 14 1
13 மத்திய பிரதேசம் 9 9
14 உத்தரப்பிரதேசம் 8 4
15 உத்தரகாண்ட் 8 4
16 சண்டிகர் 3 2
17 ஜம்மு காஷ்மீர் 3 3
18 அந்தமான் நிக்கோபார் தீவுகள் 2 0
19 கோவா 1 0
20 ஹிமாச்சல பிரதேசம் 1 1
21 லடாக் 1 1
22 மணிப்பூர் 1 0
23 பஞ்சாப் 1 1
மொத்தம் 1,525 560

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 145.44 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,22,801

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து, தற்போது 0.35 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.27 சதவீதம்;

கடந்த 24 மணி நேரத்தில் 9,249 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,42,84,561 என அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 2.55%

வாராந்திர பாதிப்பு விகிதம் 1.35% ஆகும்.

இதுவரை மொத்தம் 68.00 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version