பர்சனல் ஃபினான்ஸ்

பிபிஎப், செல்வ மகள் திட்டம் டெபசிட், பணம் திரும்பப் பெறுதலுக்கு விலக்கு அளித்த மத்திய அரசு!

Published

on

பிபிஎப், செல்வ மகள் திட்டம் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டியை குறைத்து அறிவித்தது சேமிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்து இருந்தது.

இந்நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் மத்திய அரசு, 2019-2020 ஆண்டுக்கான தவணையை மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றாலும், ஜூன் மாதம் 30ம்-தேதிக்குள் செலுத்தலாம் என்ற விலக்கை அளித்துள்ளது. அதனால் வரி சேமிப்பைத் தவறவிட்ட முதலீட்டாளர்கள் பெறும் அளவில் பயனடைவார்கள்.

மேலும் வாடிக்கையாளர்களின் பிபிஎப், ரெக்கரிங் டெபாசிட் திட்டம் முதலீடு 2020 மார்ச் 31-ம் தேதியுடன் முதிர்வடைந்து இருந்தாலும், பணத்தை திரும்பப் பெறாமல் இருந்தால், 2020 ஜூன் மாதம் வரையிலான காலாண்டு லாபத்தைச் சேர்த்துப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிஎப், செல்வ மகள் திட்டத்தில் பணம் டெபாசிட் செய்ய உள்ளவர்கள் அதை சரியாக தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version