வணிகம்

கொரோனா வைரஸ் எதிரொலி.. எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கிய வணிகர்களுக்கு அவசரக்கால கடன் திட்டம் அறிவிப்பு!

Published

on

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ளன. எனவே, இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவசரக்கால கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

எஸ்பிஐ வங்கியின் இந்த அவசரக்கால கடன் திட்டத்தின் கீழ், எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்ற வணிகர்களின் வணிகம், கொரோனா வைரஸ் காரணங்களா பாதிப்படைந்து இருந்தால், நிறுவனத்தின் மூலதனத்தில் 10 சதவீதம் என அதிகபட்சம் 200 கோடி ரூபாய் வரை கடன் பெறலாம்.

கொரோனா வைரஸ் அவசரக் கால திட்டத்தின் கீழ் கடன் பெற்றால், அவற்றுக்கு நிரந்தர வட்டியாக 7.25 சதவீதம் வசூலிக்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version