இந்தியா

கொரோனா 3வது அலையைத் தடுக்க முடியாது; ஆகையால்…- மருத்துவர்கள் கூட்ட எச்சரிக்கை

Published

on

நாட்டின் மிகப் பெரிய மருத்துவர்களின் கூட்டமைப்பான இந்திய மருத்துவ சங்கம், கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்துப் பல்வேறு எச்சரிக்கைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு விடுத்து உள்ளன.

மருத்துவ சங்கம், ‘உலக அளவில் நமக்கு கிடைக்கும் தகவலை வைத்துப் பார்க்கும் போதும், பெருந்தொற்றின் வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது, மூன்றாவது அலை என்பதை தவிர்க்கவே முடியாது என்பது புலப்படுகிறது. அதே நேரத்தில் நாட்டில் உள்ள பல மாநில அரசுகளும், பொது மக்களும் கொரோனா கட்டுப்பாடுகளை மதிக்காமல் தொடர்ந்து கூட்டமாக பொது இடங்களில் கூடி வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

சுற்றுலாவுக்குச் செல்வது, யாத்திரைகள் செல்வது உள்ளிட்டவைகள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்கலாம். கொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை இப்படிப் பெருமளவு கூட விடுவதன் மூலம் மூன்றாவது அலை சுலபமாக பரவி விடும்.

பொருளாதார காரணங்கள் சொல்லி பொது மக்களைக் கூட விட்டால், மூன்றாவது அலை ஏற்படுத்தப் போகும் பொருளாதார தாக்கம் அதைவிட மிகப் பெரியதாக இருக்கும்’ என்று கறார் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version