இந்தியா

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா மருந்துக்கு வெற்றி!

Published

on

விலங்குகள் மீது நடத்தப்பட்ட கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்தின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாரத் பையோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசி மனித பரிசோதனையிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்ஸின் மருந்து இரண்டாம் கட்ட சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் முதல் கட்ட கோவாக்ஸின் பரிசோதனை சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரில் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பரிசோதனையின் போது மருந்து அளிக்கப்பட்டவர்கள் 28 நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கோவாக்ஸின் மருந்தில் 2-ம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.

கோவாக்ஸின் மருந்து முதற் கட்டத்தின் போது 18 முதல் 55 வரை உள்ள தன்னார்வலர்களுக்கு அளிக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தில் 12 வயது முதல் 65 வயது முதியவர்கள் வரை கோவாக்ஸின் மருந்து அளிக்கப்படுகிறது.

மறுபக்கம் விலங்குகளுக்கு கோவாக்ஸின் மருந்தை அளித்து நடைபெற்ற சோதனையில், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, கிருமிகளை வளர விடாமல் தடுத்துக் கொல்கிறது என்று பாரத் பயோ டெக் தெரிவித்துள்ளது.

தடுப்பு மருந்து வழங்கப்பட்டவர்களுக்கு நிமோனியா போன்ற எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட பரிசோதனையில் கோவாக்ஸின் வெற்றி பெற்றால் மூன்றாம் கட்ட பரிசோதனைக்குச் செல்லும். அதிலும் வெற்றி பெற்றால் முழுமையான பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version