தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையை நிறுத்தக்கோரி வழக்கு: நீதிமன்ற எச்சரிக்கையால் வாபஸ்

Published

on

மருத்துவ படிப்பிற்கான எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முயற்சித்த நிலையில் நீதிமன்றம் எச்சரிக்கை காரணமாக வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

தமிழகத்தில் தற்போது எம்பிபிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது என்பதும் இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு காலை 8 மணி முதல் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வன்னியர் இட ஒதுக்கீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும் என பாமக முன்னாள் எம்எல்ஏ காவேரி வையாபுரி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததை அடுத்து வழக்கை முன்னாள் எம்எல்ஏ காவேரி வையாபுரி வாபஸ் பெற்றார். இந்த சம்பவம் உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version