தமிழ்நாடு

அதிமுக உள்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்கப்படுமா? பெரும் பரபரப்பு!

Published

on

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில் இன்று இந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒன்றான ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

வேறு யாரும் இந்த இரண்டு பதவிக்கு விண்ணப்பம் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாகவும் எனவே இந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுகவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

ஆனால் இந்த முறையீட்டை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வரநாத் பண்டாரி அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுகுறித் மனு தாக்கல் செய்யுமாறும், மனு தாக்கல் செய்யாத நிலையில் அதை எப்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து முறையாக மனு தாக்கல் செய்தால் அதன் பின் இந்த மனுவை விசாரிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version