தமிழ்நாடு

சர்கார் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய அதிமுக எம்எல்ஏ: நீதிமன்றம் நோட்டீஸ்!

Published

on

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆளும் அதிமுகவை விமர்சிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய சில காட்சிகள் இடம்பெற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.

சர்கார் படத்தில் வில்லி கதாபாத்திரத்துக்கு கோமளவள்ளி என ஜெயலலிதாவின் இயற்பெயரை வைத்தது படக்குழு. மேலும் இலவச திட்டங்களை அவதூறாக படத்தில் சித்தரிக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றன. இது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மதுரையில் சர்கார் படம் ஓடும் திரையரங்கம் முன்னர் அதிமுகவினர் போராட்டம் நடத்தி பரபரப்பை அப்போது ஏற்படுத்தினர்.

மதுரையில் சர்கார் படத்தை திரையிட்டுள்ள தியேட்டரை ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமையிலான அதிமுகவினர் முற்றுகையிட்டனர். அவர்கள் சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இந்த போராட்டத்தின் போது அவர்களால் பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் உண்டானது.

இந்நிலையில் சா்காா் படத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியது தொடா்பாக பதில் அளிக்குமாறு அதிமுக சட்டமன்ற உறுப்பினா் ராஜன் செல்லப்பாவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version