தமிழ்நாடு

ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லுமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published

on

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. இது குறித்த அரசாணையை தமிழக அரசால் வெளியிடப்பட்டது என்பதும், அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் சகோதரி மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தனி நபர் சொத்துக்களை அரசுடமை ஆக்குவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் வேதா இல்லத்தை அரசுடமையாக்கிய சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணையில் இருந்து வந்தது என்பதும் இருதரப்பு வழக்கறிஞர்களும் இதுகுறித்து ஆஜராகி வாதம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என இரண்டு நினைவிடங்கள் எதற்கு என்றும், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடமை ஆக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர்.

மேலும் மூன்று வாரங்களில் வாரிசுதாரர்கள் இடம் வேதா இல்லத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பை ஏற் ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version