தமிழ்நாடு

பண மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Published

on

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் சிறப்பு நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது

அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவோ, சலுகை வழங்கவோ முடியாது என்றும் வரும் ஆகஸ்டு 8ஆம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததாக பதிவு செய்ய வழக்கில்தான் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி வரும் 8ஆம் தேதி நீதிமன்ற உத்தரவுபடி ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2011-2016ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தார் என்பதும் அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version