தமிழ்நாடு

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு தண்டனை இல்லை: சுப்ரீம் கோர்ட் ஆச்சரிய தீர்ப்பு!

Published

on

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு தண்டனை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது .

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர் தனது அக்காள் மகளான 14 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். அந்த சிறுமி பதினைந்து வயதிலும் 17 வயதிலும் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் இதுகுறித்து காவல் துறையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

காவல்துறையினர் சிறுமியிடம் புகார் பெற்று தண்டபாணி மீது வழக்கு பதிவு செய்தனர். அவருக்கு போஸ்கோ சட்டத்தின்கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தண்டபாணி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

தன்னுடைய மனைவி தன்னை மிகவும் நேசிப்பதாகவும் தனது இரண்டு குழந்தைகளையும் தான் நன்றாக பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தனக்கு தண்டனை கொடுத்தால் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் கஷ்டப் படுவார்கள் என்றும் அவர் மனு தாக்கல் செய்திருந்தார் .

இந்த மனுவை விசாரித்த நீதிபதி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கியது தவறு என்றாலும் தற்போது அந்த சிறுமி 18 வயது ஆகி உள்ளார் என்றும் தண்டபாணியுடன் சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதால் அந்த குடும்பத்தை பிரிக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் அதனால் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்கிறோம் என்றும் தீர்ப்பளித்தனர் .

ஆனால் அதே நேரத்தில் அந்த பெண்ணை தண்டபாணி சரியாக பார்த்துக் கொள்ளாவிட்டால் இந்த தீர்ப்பு மாறுபடும் என்பதையும் தண்டபாணி ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version