தமிழ்நாடு

மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட ஏழு பேர் முதல்வரைப் பற்றி பேசவும், எழுதவும் தடை!

Published

on

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலைகள் தொடர்பான சம்பவங்களில் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சயன் மற்றும் மனோஜ் ஆகியோரையும் மேத்யூ சாமுவேல் ஊடகங்கள் முன்னிலையில் பேச வைத்தார். அவர்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் இந்த கொலை, கொள்ளை சம்பவங்களின் பின்னணியில் உள்ளனர் என தெரிவித்தனர். இதனையடுத்து மேத்யூ சாமுவேல் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை ஐந்து கொலைகள் செய்த குற்றவாளி என விமர்சித்து வருகிறார்.

இந்த விவகாரம் தமிழக அரசியலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பெரும் புயலை வீசி வருகிறது. இந்நிலையில் கொடநாடு விவகாரத்தில் தன் பெயருக்கும், பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவதூறு பரப்புவதாக தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மான நஷ்ட வழக்கு தொடர அனுமதி கோரியும் 1.10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும் மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர முதல்வர் தரப்புக்கு அனுமதி அளித்த நீதிமன்றம், மாத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட ஏழு பேரும் முதல்வரைப் பற்றி பேசவும், எழுதவும் தடை விதித்தது. மேலும் இந்த ஏழு பேரும் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

seithichurul

Trending

Exit mobile version