சினிமா

நீங்கள் இதை செய்திருக்கலாம்…வழக்கு தொடர்ந்த நடிகை சமந்தாவுக்கு நீதிபதி அறிவுரை..

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

சமந்தாவின் விவாகரத்துக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. பல யுடியூப் சேனல்கள் மற்றும் ஊடகங்கள் அவரை பற்றி செய்திகள் வெளியிட்டது. சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் இந்த பிரச்சனையை தினசரி தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு வந்தது. குறிப்பாக சமந்தா குறித்த வதந்திகளையும் பரப்பி வந்தது.

சமந்தா குழந்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதவர் என்றும், அவருக்கு வேறு சில ஆண்களிடம் தொடர்பு இருந்ததாகவும் அவர் அடிக்கடி கருக்கலைப்பு செய்ததாகவும் வதந்திகள் பரவியது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தா கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு, சில ஊடகங்கள், யுடியூப் சேனல்கள் மற்றும் ஒரு வழக்கறிஞர் மீதும் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ‘சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்கு தொடர்வதை விட அவர்களை மன்னிப்பு கேட்ட சொல்லி இருக்கலாம். பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விபரங்களை பொது களத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version