இந்தியா

கூகுளில் கல்யாணம்…சோமோட்டாவில் சாப்பாடு… கொரோனா படுத்தும் பாடு….

Published

on

கடந்த 2 வருடங்களாலவே இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கொரோனா மனிதர்கள் வாழ்க்கையை புரட்டி போட்டு வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கும் நிலை கூட ஏற்பட்டது. வாரத்தின் எல்லா நாட்களும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டது.

இதில், அதிகம் பாதிக்கப்பட்டது திருமணங்கள்தான். ஏற்கனவே தேதி குறித்து திருமணம் நிச்சயம் செய்திருந்தவர்கள் கொரொனோ கட்டுப்பாடுகளால் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் திருமணத்தை தள்ளி போட்டனர். திருமணத்திற்கு இத்தனை பேர்தான் வர வேண்டும் என அரசு கட்டுப்பாடுகளும் விதித்தது. எனவே, பலரும் மிகவும் எளிமையாக திருமணம் செய்தனர்.

தற்போது மீண்டும் கொரோனா 3வது அலை துவங்கியுள்ளது. தமிழகத்தில் திருமணத்தில் 100 மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதேபோல், பல மாநிலங்களிலும் திருமணம் தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சந்தீபன் சர்க்கார் – அதிதி ஹாஸ் ஜோடி தங்களின் திருமணம் ஜனவரி 24ம் தேதி Google Meet-ல் நடைபெறும் எனவும், விருந்தினர்கள் அதில் கலந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு Zomato ஆப் மூலம் அவர்களின் வீட்டிற்கே உணவு டெலிவரி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா காலத்துல எல்லாரும் இதை ஃபாலோ பண்ணுங்கப்பா!…

seithichurul

Trending

Exit mobile version