செய்திகள்

கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… அதிர்ச்சியில் கோவை வாசிகள்…..

Published

on

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பும் பரவி வருகிறது.

சில மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 650-750 ஆக இருந்த நிலையில் திடீரென ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் கடந்த சில நாட்களாக இது படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்றது. தற்போது 30 ஆயிரம் பேராக அதிகரித்துள்ளது. எனவே, இதை கட்டுப்படுத்துதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்டு வருகிறது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

ஆனால், கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் 24,792 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. கடந்த 23ம் தேதி ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 3912 பேர் பாதிக்கப்பட்டனர். இது சென்னையை விட அதிகமாகும். நேற்று கோவையில் 3786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அந்த மாவட்ட ஆட்சியர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பொதுமக்கள் கண்டிப்பாக வெளியே வரும் போது மாஸ்க் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிமுறைகளை அவர் அறிவித்துள்ளார்.

Trending

Exit mobile version