செய்திகள்

சென்னையில் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா.. பொதுமக்கள் அதிர்ச்சி

Published

on

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியின் 19வது தெருவில் 10 பேருக்கு கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையின் சில தெருக்களிலும் கொரொனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் அந்த தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பல மாதங்களுக்கு பிறகு சாலையிகள் மீண்டும் தடுப்புகள் வைக்கப்பட்டு வருகிறது.இது சென்னை வாசிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்த நலவாழ்வுத்துறை அமைச்சர் ‘சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version